விமானதளத்தில் வைத்து விழா நடத்தி ஷி ஜின்பிங்கை வரவேற்ற ட்ரம்ப்
வர்த்தக சமாதானத்தை ஜனவரி மாதம் வரை நீட்டிக்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவை சென்றடைந்துள்ளார்.
வொஷிங்டனுக்கு வெளியே உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டு இராணுவ தளத்தில் ட்ரம்ப், ஷி ஜின்பிங்கை இன்று செங்கம்பலமிட்டு வரவேற்றபோது, குறித்த வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட், இரு நாடுகளும் சுங்க வரிகளைக் குறைக்கவும், புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருக்கவும் ஒப்புக்கொண்டிருந்த போர்நிறுத்தத்தின் நீட்டிப்பையும் இதன்போது அறிவித்துள்ளார்.
உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்கள்
இரு வல்லரசுகளுக்கும் இடையேயான மிகப்பெரிய பதற்றப் புள்ளிகளில் ஒன்றாக வர்த்தகம் இருந்து வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு, ஈரானுடனான ட்ரம்பின் போர் மற்றும் தாய்வான் மீதான சீனாவின் திட்டங்கள் ஆகியவையும் இருதரப்பு பேச்சுவார்த்யைில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அமெரிக்காவும் சீனாவும் “உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்கள்” மற்றும் “ஒருவேளை உலகின் இரண்டு மிகவும் சக்திவாய்ந்த இராணுவங்களைக் கொண்டவை” என்பதால், அவை மிக உயர்ந்த மட்டங்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |