முற்றுகிறது முறுகல் : கனடாவிற்கு ட்ரம்ப் பதிலடி
‘கனடாவில்(canada) உற்பத்தியாகும் எந்த பொருட்களும் எங்களுக்கு தேவையில்லை. எங்களிடம் ஆற்றல் இருக்கிறது' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) தெரிவித்தார்.
ஜனாதிபதி ட்ரம்ப், 'மெக்சிகோ(mexico), கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதித்துள்ளார். ட்ரம்பின் இந்த மேலதிக வரி விதிப்பால் மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் கடும் அதிருப்தி அடைந்தன.
கனடா பிரதமரின் அறிவிப்பு
அமெரிக்க பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) அறிவித்தார். அதேபோல், சீனா(china), மெக்சிகோ நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என தெரிவித்தன.
ட்ரம்பின் பதிலடி
இது தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது: வரிகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளுடன் நாடுகள் செயல்படுவதால், அமெரிக்க மக்கள் சில வலியை உணரக்கூடும். வலிக்கு விலைமதிப்பு அதிகம்.
கனடாவிடம் உற்பத்தியாகும் எந்த பொருட்களும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு ஆற்றல் இருக்கிறது. நாங்கள் சொந்தமாக உருவாக்குவோம் எங்களுக்கு தேவையான அளவைவிட அதிகமாக வைத்திருப்போம்.
கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக உருவாக்குவோம். அதன் மூலம் கனடா மக்களுக்கு மிக குறைந்த வரி மற்றும் ராணுவ பாதுகாப்புகள் ஆகியவற்றை உருவாக்குவோம். என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |