பிழையான தரவுகளை வெளியிட்டு அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி -சன்ன ஜயசுமன குற்றச்சாட்டு
goverment
channa jayasumana
overthrow
By Sumithiran
கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பாக பிழையான தரவுகளை வழங்கியவர் மீது ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென ஔடதங்கள் தயாரிப்பு விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
நாட்டில் நூற்றுக்கு மூன்று, நான்கு வீதமான சதிகாரர்கள், நாசக்காரர்கள் இருக்கின்றனர். அந்த நூற்றுக்கு மூன்று நான்கு வீதமானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புடன் பதவிகளுக்கு வரும் போது, சில நேரங்களில் எண்களை மாற்றுவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என நினைத்து பணியாற்றியதாக இருக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் கூறினார்.
இது தொடர்பாக எதிர்காலத்தில் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தவறிழைத்ததாக நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி