இலங்கையை இன்று சுனாமி தாக்குமா..! இந்தோனேசிய நிலநடுக்கத்தின் எதிரொலி
Tsunami
Sri Lanka
By Kiruththikan
இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
60.27 மைல் ஆழத்தில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் தனிம்பார் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பூமிக்கு அடியில் 97 கிலோமீட்டர் (60.27 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளன