யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்!
யாழில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளது.
காசநோயினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துறை சார்ந்த வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆண்கள் பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்விபயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு ஏற்பட்ட நிலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
சிகிச்சை
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவனுக்கு காச நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய மாணவர்கள் சிலரை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் அவர்களுக்கும் காசநோய் இருப்பது தெரியவந்தது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துறை சார்ந்த வைத்தியநிபுணர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன் தொடர்ந்தும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பரவாமல் தடுக்க வழிமுறைகள்
குறித்த நோய் ஏனைய மாணவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு அவர்களுக்கு 14 நாட்கள் வீட்டில் வைத்து சிகிச்சை வழங்கப்படுவதாகவும் பின்னர் முக கவசங்களை அணிந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்..
மாணவர்களுக்கு காச நோயின் ஆரம்ப நிலை காணப்படுவதுடன் உரிய முறையில் சிகிச்சை பெற்றால் ஏனையவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த கல்வி உயர் அதிகாரி பாடசாலையில் இந்தநோய் இனங்காணப்பட்டமையை உறுதி செய்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |