வைத்தியரை கடத்திய ஆசிரியர் கைது
பதுளை பிரதேசத்தை சேர்ந்த விசேட வைத்தியர் ஒருவர் 40 இலட்சம் ரூபா கப்பம் பெறுவதற்காக மெட்டியகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பலவந்தமாக சிறைவைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் ரெிவித்தனர்.
இதேவேளை விசேட வைத்தியரிடம் கப்பம் கோரிய உதவி வகுப்பு ஆசிரியரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக ஹிக்கடுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வைத்தியரை வலுக்கட்டாயமாக கடத்தி
கப்பம் பெறுவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த விசேட வைத்தியர் பதுளையில் உள்ள மகப்பேறு வைத்திய நிபுணர் எனவும், 28 வயதான உதவி வகுப்பு ஆசிரியர், மெட்டியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டனர்.
சந்தேகத்திற்குரிய உதவி வகுப்பு ஆசிரியர், நிபுணத்துவ வைத்தியரை தொலைபேசியில் அழைத்து மெட்டியகொடை பிரதேசத்திற்கு வைத்தியர் வந்தவுடன் சந்தேகத்திற்குரிய உதவி வகுப்பு ஆசிரியர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி மெட்டியகொட பிரதேசத்தில் இரண்டரை நாட்கள் காவலில் அடைத்துள்ளார்.
நான்காவதாக கொலை செய்யப்போவதாக
இதுவரை 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.40 இலட்சம் ரூபா கப்பம் கொடுக்கவில்லை என்றால் நான்காவதாக கொலை செய்யப்போவதாக வைத்திய நிபுணரை மிரட்டியதாகவும் கடத்தப்பட்ட வைத்தியருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைவதற்கு 4 மணித்தியாலங்கள் இருந்த போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |