பைடன் பதவியேற்பில் பாதுகாப்பு அளித்த 200 வீரர்களுக்கு கொரோனா
srilanka
america
joe biden
tunited states
armycovid19
By Vasanth
அமெரிக்காவில் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்களில் சுமார் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன், கடந்த 20ம் திகதி பதவியேற்றார்.
இதையொட்டி முன்னெப்போதும் இல்லாத அளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், பைடன் பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட வீரர்களில் சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே, பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி