நிலத்தின் கீழே மறைந்து வாழ்ந்த 20,000 மக்கள் : ஆச்சரியம் ஆனால் உண்மை
துருக்கியின் கபோடிக்கியா பிராந்தியத்தில் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் நிலக்கீழ் சுரங்கத்தில் சுமார் 20 ஆயிரம் மக்கள் மறைந்திருந்து வாழ்க்கையை நடத்தியது பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
1962 ஆம் ஆண்டு இந்தப்பகுதியில் வீடு கட்டுவதற்காக ஒருவர் நிலத்தை தோண்டியபோது நிலத்திற்கு கீழே ஒரு சுரங்கம் இருப்பதைக்கண்டு துருக்கிய அரசாங்கத்திற்கு அறிவித்தார்.
இதனையடுத்து அந்த சுரங்கத்தை தோண்டிய துருக்கிய அரசாங்கத்திற்கு பாரிய அதிர்ச்சியும் அதேநேரத்தில் ஆச்சரியமும் காத்திருந்தது.
இவ்வாறு தோண்டப்பட்ட சுரங்கத்தில் பெரியதொரு நகரமே இருப்பதைக்கண்டு அதிகாரிகள் வியந்துதான்போனார்கள்
எவ்வாறான இயற்கை அனர்த்தத்தையும் தாங்கும் அளவிற்கு அந்த நிலக்கீழ் நகரம் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த நிலக்கீழ் நகரம் நிலத்திற்கு கீழே எட்டு அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு நுணுக்கமாக அமைக்கப்பட்ட இந்த நிலக்கீழ் நகரத்தில் யாரும் அறியாத வகையில் இந்த மக்கள் அங்கு வாழ காரணம் என்ன? தொழில்நுட்பம் எதுவும் வளராத அந்தக்காலத்தில் இந்த நிலக்கீழ் நகரத்தை மிகவும் நேர்த்தியாக அந்த மக்கள் எவ்வாறு அமைத்தார்கள் என்பதை தொடரும் உண்மையின் தரிசனம் காணொளியில் காணுங்கள்..