ரஷ்யாவை எதிர்கொள்ள நேட்டோவின் திட்டம் - சுவீடனுக்கு பச்சை கொடி காட்டிய துருக்கி
சுவீடன் நேட்டோ படையில் இணைய துருக்கி அதிபர் எர்டோகன் நேற்று(11) சம்மதம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் துருக்கி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அதற்கான அழுத்தத்தை கொடுப்பதாகவும் அதிபர் உறுதியளித்துள்ளார்.
துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்சன், நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்திப்பிற்கு பிறகு இந்த முடிவை துருக்கி எடுத்துள்ளது.
சுவீடன் நேட்டோவில் இணைய விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கு தொடர்ந்து துருக்கி தடைகளை ஏற்படுத்தி வந்தது.
வரலாற்று நாள்
இந்நிலையில் சுவீடன் பிரதமர் ஜோன்ஸ் ஸ்டோல்டன்பெர்க் துருக்கியின் இந்த முடிவை வரலாற்று நாள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர், சுவீடன் இணைவது, நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பயனளிக்கும் எனவும் இது பாதுகாப்பு மற்றும் வலிமையை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வகையில் சுவீடன் 32 ஆவது நாளாக நேட்டோ கூட்டமைப்பில் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.