பத்து வருடங்களின் பின்னர் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நாடு
Bandaranaike International Airport
Turkey
Flight
By Sumithiran
துருக்கி ஏர்லைன்ஸ், துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து 2023 ஒக்டோபர் தொடக்கம் கட்டுநாயக்காவுக்கான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
ஏர்போர்ட் அன்ட் ஏவியேஷன் சேவிசஸ் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) படி, இலங்கையில் 10 ஆண்டுகால செயல்பாடுகளுக்குப் பின்னர் விமான நிறுவனம் நேரடி விமான சேவையைத் தொடங்குகிறது.
குறுகிய நேரத்தில் உலகின் 129 நாடுகளுடன் விரைவாக தொடர்பு
இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டால் குறுகிய நேரத்தில் உலகின் 129 நாடுகளுடன் விரைவாக தொடர்பு கொள்ள இலங்கைக்கு உதவும்.
இலங்கை அதிகாரிகளின் தொடர்ச்சியான ஆதரவுடன், துருக்கிய எயார்லைன்ஸ் இலங்கையை மேம்படுத்துவதற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக ஏஏஎஸ்எல் மேலும் குறிப்பிட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்