கிளிநொச்சி நொச்சிமுனை பகுதியில் மஞ்சள் மீட்பு
kilinochchi
turmeric
recovered
By Vanan
கிளிநொச்சி முழங்காவில் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமுனை பகுதியில் 162 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்றைய தினம் நொச்சி முனை பகுதியில் கடற்கரையில் கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட நான்கு சாக்கு மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சளை இராணுவத்தினரும் முழங்காவில் காவல்துறையினரும் இணைந்து மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நொச்சி முனையைச் சேர்ந்த 39 வயதான ஒருவரையும், அன்பு புரத்தைச் சேர்ந்த 22 வயதான ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட மஞ்சள் மற்றும் சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக முழங்காவில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.