இலங்கை கடல்கரைகளில் கரையொதுங்கும் இறந்த கடலாமைகள்!
Puttalam
SriLanka
Olive Redly
By Chanakyan
புத்தளம் உடப்பு முகத்துவாரம் பகுதியில் இன்று அதிகாலை கடலாமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது என புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள உதவி அதிகாரி சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
குறித்த கடலாமையானது ஒலிவ் நிற வகையைச் சார்ந்து எனவும் அதன் எடையானது 40 கிலோ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடலாமையை உடற்கூற்று பரிசோதனைக்காக ஆணைவிழுந்தான் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பாக கொழும்பு துறைமுக கடல்பரப்பிற்கு வெளியே எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்ததையடுத்து பல கடலாமைகள், டொல்பின்கள் மறற்றும் திமிங்கலங்கள் என கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ந்து உயிரிழந்து கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.