தென்னிலங்கை தொலைக்காட்சி நாடக இயக்குனர் மர்மமான முறையில் மரணம்
'கோபிகட' தொலைக்காட்சி நாடகத்தின் இயக்குனரான சுதம் சந்திமவின் மரணத்தில் மர்மம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலன்னாவை, சாலமுல்லவில் உள்ள அவரது வீட்டில் நேற்று சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு குழந்தைகளின் தந்தையான அவர், தனது 53ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். தயாரத்னவின் மனைவி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி அழைப்பு
அவரது கணவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால் சந்தேகமடைந்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோதே சுதம் சந்திம உயிரிழந்திருப்பதை அவதானித்ததாக தெரிவித்துள்ளார்.
வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தபோது, அறையில் ஒரு படுக்கையில் அவர் இறந்து கிடந்தததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் குறித்து வெல்லம்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
