யாழில் கிராம உத்தியோகத்தர் - பொதுமக்கள் முரண்பாடு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உணவு வழங்கவில்லை எனக் கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பருத்தித்துறை - கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் சில குடும்பங்களுக்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களில் சில குடும்பத்தினருக்கு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிராம சேவையாளர் உணவு வழங்க மறுத்தமையால் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் போராட்டம்
அதனை அடுத்து கிராம சேவையாளர் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார்கள் என முறைப்பாடு செய்திருந்தார்.
இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், இருவரையும் நேற்று திங்கட்கிழமை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் முன்பாக நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |