அனுமதிப் பத்திரமின்றி எரிபொருள் விற்ற இருவர் கிளிநொச்சியில் கைது
arrest
politics
srilankan
permit
By Kiruththikan
கிளிநொச்சி - தர்மபுரம் மற்றும் விசுவமடு பகுதிகளில் அனுமதிப் பத்திரமின்றி எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
38 மற்றும் 44 வயதான இருவரே குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 279 லீற்றர் பெற்றோல், 605 லீற்றர் டீசல் மற்றும் 300 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி