அம்பாறையில் போதைபொருளுடன் இருவர் கைது!
அம்பாறையில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (17-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை காவல் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் காவல்துறையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு இவ்விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கைது நடவடிக்கையின் போது முதலாவது சந்தேகநபரான விளினியடி - 08 பிரிவைச் சேர்ந்த 30 வயதுடைய நபரிடமிருந்து ஆறு கிராம் 074 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மற்றைய இரண்டாவது சந்தேகநபரான செந்நெல் கிராமம் - 02 பிரிவைச் சேர்ந்த 27 வயதுடைய நபரிடமிருந்து இரண்டு கிராம் 158 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்வசம் போதைப்பொருள் வைத்திருந்தமை குறித்தும் இவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களா அல்லது தனிப்பட்ட பாவனைக்காக வைத்திருந்தார்களா என்பது தொடர்பிலும் சம்மாந்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |