நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்கள்! பொதுமக்களிடையே பரவும் வதந்திகள்
நாயாறு பாலத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்றன என முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பு (DDMCU), கூறியுள்ளது.
இதுகுறித்து தெளிவுபடுத்துவதற்காக பின்வரும் அறிவித்தல் வெளியிடப்படுகிறது என ஒருங்கிணைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
“நாயாறு பாலத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒரு பாலத்தின் பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளன.
சேதமடைந்த பாலம்
மற்றொரு சேதமடைந்த பாலம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அந்த பாலத்தின் புதிய பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.

எனவே,நாயாறு பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. பொதுமக்கள் நாயாறு பாலத்தை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
RDA அதிகாரிகளால் நாயாறு பாலம் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என்பதும் அறிவிக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதிகாரபூர்வ அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்