கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இரண்டு வர்த்தகர்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்களால் மறைத்து கொண்டுவரப்பட்ட பெருந்தொகை சிகரெட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐம்பத்து இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை இந்த வர்த்தகர்கள் மறைத்து கொண்டு வந்த நிலையில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்பட்டது.
மறைத்து கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள்
நேற்று (07) மற்றும் நேற்று முன்தினம் இவர்கள்(06) கைது செய்யப்பட்டனர். அவர்களது பயணப் பையில் 52,400 சிகரெட்டுகள் அடங்கிய 262 அட்டைப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகர்கள் இருவர் கைது
அவர்களில் ஒருவர் நிட்டம்புவ, ருக்கவில பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதான வர்த்தகர் ஆவார். அவர் கொண்டு வந்த 02 பொதிகளில் 150 அட்டைப்பெட்டிகள் "மன்செஸ்டர்" ரக சிகரெட்டுகள் மற்றும் தலா 06 "கோல்ட் லீஃப்" மற்றும் "பிளாட்டினம்" ரக சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
மற்றைய சந்தேக நபர் தங்காலை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய வர்த்தகர்.அவரது 02 பயணப் பொதிகளில் 100 அட்டைப்பெட்டிகள் மான்செஸ்டர் ரக சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்த போதே போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |