நாடாளுமன்றில் இரு நாள் விவாதம் - விசேட கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானம்
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நாடாளுமன்றில் 2 நாட்கள் விவாதமொன்றை நடத்துவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றில் நாட்டின் தற்போதைய நிலைமை விவாதமொன்றை நடத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்றைய விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, சஜித் பிரேமதாஸ, லக்ஷ்மன் கிரியெல்ல, அநுரகுமார திசாநாயக, ரிசாட் பதியூதீன், மஹிந்த அமரவீர, தினேஸ் குணவர்த்தன மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ போன்றோர் கலந்து கொண்டனர்.
