இந்தியாவின் தோல்வியால் மேலும் பறிபோன உயிர்கள்!
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து, இந்தியாவைச் சேர்ந்த இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் பாங்குரா மற்றும் ஒடிசாவின் ஜாஜ்பூர் ஆகிய இரண்டு பிரதேசங்களையும் சேர்ந்த இரண்டு இளைஞர்களே தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் (19) அகமதாபாத்தில் உள்ள விளையாட்டரங்கில் அவுஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இடம்பெற்ற உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா உலகக்கோப்பையினை தவறவிட்டது.
அறையில் தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்த வங்க மாநிலத்தின் பாங்குரா பகுதியைச் சேர்ந்த 23 வயதான ராகுல் லோஹர் என்ற இளைஞன் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக குறித்த இளைஞனின் மைத்துனர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஒடிசாவின் ஜாஜ்பூரை சேர்ந்த 23 வயதுடைய தேவ் ரஞ்சன் தாஸ் என்ற இளைஞனும், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு போட்டி முடிந்த சிறிது நேரத்தில் பிஞ்சர்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இயற்கைக்கு மாறான மரணம்
இறந்த தேவ் ரஞ்சன் தாஸ், "உணர்ச்சிக் கோளாறு நோய்க்காக" சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது மாமா காவல்துறையிடம் கூறியுள்ளார்.
இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல், விரக்தியில் அவர் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என வீட்டார் கூறுகின்றனர்.
இந்த இரண்டு மரணங்களையும் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இரண்டு உடலங்களினதும் பிரதே பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்