குடு சலிந்துவின் சகாக்கள் இருவர் தென்னிலங்கையில் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'குடு சலிந்து'வின் நெருங்கிய நண்பர்கள் இருவர் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை - பயாகலாவின், கும்புருகோடா பகுதிகளில் இன்று காலை (21.04.2026) நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போதே இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 'பெத்தா' என அழைக்கப்படும் பதும் என்றும், மற்றையவர் 'கவிந்து' அல்லது 'கவியா' (Kaviya) என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுபவதாக கூறப்படுகின்றது.
ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் களுத்துறை - பயாகல பகுதியில் இரகசியமாகத் தங்கிய நிலையில், சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதும் என்றழைக்கப்படும் சந்தேக நபர் இருந்த பகுதியிலிருந்து 42,350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், கவிந்து என்றழைக்கப்படும் சந்தேக நபர் இருந்த பகுதியிலிருந்து 48,170 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்த் தேசிய சக்திகள் ஈரான் விவகாரத்தை உரையாடலுக்கு உட்படுத்துவத வேண்டும் 54 நிமிடங்கள் முன்