மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்து!
தர்மபுரம் புதுக்குடியிருப்பு பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியில் அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் முச்சக்கர வண்டியில் மோதுண்டு இருவரும் படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் மற்றும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்தில் சம்பந்தப்பட்ட ர் இராணுவ வீரர் அத்தோடு இச் சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
