அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

Benjamin Netanyahu United States of America Israel Ivana Trump
By Dhilak May 23, 2025 03:19 AM GMT
Report

புதிய இணைப்பு

நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன்,  காசாவுக்காக செய்தேன் என இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் D.C.யில் உள்ள யூத அருங்காட்சியகம் வெளியே இஸ்ரேல் தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 31 வயதான எலியாஸ் ரோட்ரிகஸ் (Elias Rodriguez) என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது, ரோட்ரிகஸ் "பாலஸ்தீனத்திற்கு விடுதலை" என்று கோஷமிட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டை தான் செய்ததாக ஒப்புக் கொண்டதாகவும் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

வாஷிங்டன், டிசியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதற்கு யூத எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு தூண்டுதல் சூழலே காரணம் என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம் | Two Israeli Embassy Employees Shot Dead In Us

இந்தத் தூண்டுதல்கள் பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளாலும், குறிப்பாக ஐரோப்பாவிலிருந்தும் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்கும் யூத சமூகத்திற்கும் எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் அதிக கவலை இருப்பதாக சார் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இரண்டாம் இணைப்பு

உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

வாஷிங்டன் டிசியில் உள்ள தலைநகர் யூத அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு நிகழ்விற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அத்துடன், கொடூரமான யூத எதிர்ப்பு கொலையால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதர் மற்றும் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி ஆகியோர் இந்த விவரங்களைப் பற்றித் தமக்குத் தெரிவித்ததாகவும், கொலையாளியை அமெரிக்கா நீதியின் முன் நிறுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யூத எதிர்ப்புக்கு எதிராக தெளிவாக நின்றதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நெதன்யாகு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானங்கள் பறக்கத் தடை - பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு

இந்திய விமானங்கள் பறக்கத் தடை - பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு

 

ட்ரம்ப கண்டனம்

இந்த நிலையில், இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இது யூத விரோதத்தை அடிப்படையாக கொண்டது. வெறுப்புக்கும் தீவிரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற விடயங்கள் இடம்பெற்றது மிகவும் வருத்தமளிக்கிறது! கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவுக்கு உணவுப் பொருட்களை அனுமதிப்பதாக ஏமாற்றும் இஸ்ரேல்

காஸாவுக்கு உணவுப் பொருட்களை அனுமதிப்பதாக ஏமாற்றும் இஸ்ரேல்

முதலாம் இணைப்பு

அமெரிக்காவில் வாஷிங்டன், டிசியில் உள்ள யூத அருங்காட்சியகத்தின் முன் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர்கள் "சுதந்திரம், சுதந்திரம் பாலஸ்தீனம்" என்று கூச்சலிட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு

யூத அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு நிகழ்விலிருந்து வெளியேறும்போது குறித்த அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம் | Two Israeli Embassy Employees Shot Dead In Us

அந்த நேரத்தில் நான்கு இஸ்ரேல் அதிகாரிகள் அங்கு இருந்ததாகவும் அவர்களில் இரண்டு பேர் சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிகாகோவைச் சேர்ந்த 30 வயதான எலியாஸ் ரோட்ரிக்ஸ் என்ற சந்தேக நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விண்வெளியில் ஆயுதத்தை நிலைநிறுத்தும் அமெரிக்கா..! பாதுகாப்பின் உச்சத்திற்கு சென்ற ட்ரம்ப்

விண்வெளியில் ஆயுதத்தை நிலைநிறுத்தும் அமெரிக்கா..! பாதுகாப்பின் உச்சத்திற்கு சென்ற ட்ரம்ப்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்