தமிழர் தாயகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தவர்கள் பரிதாப பலி - சுவிஸ்ஸில் கோர விபத்து!
சுவிஸ்லாந்தின் ஆறோ மாநில நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாகவும், தற்போது சுவிஸ்லாந்தின் சென்.கேலன் (St.Gallen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் (கண்ணன்) எனப்படும் நபரும், அவரது மகனும் பயணித்த மகிளுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நடைபெற்ற இடத்திலேயே அவரது மகன் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரது தந்தையும் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்