பெரமுனவில் வலுக்கும் முரண்பாடு : நாமலின் கூட்டத்தை தவிர்த்த இரண்டு முக்கிய புள்ளிகள்
பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டதையடுத்து, தங்காலையில் நேற்று (30) நடைபெற்ற கூட்டத்தை புறக்கணித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்
கடந்த 29ம் திகதி இரவு, அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
முதலில் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என மேலும் தெரிவித்துள்ளதுடன் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஊடகங்களுக்குத் தெரியவந்துள்ளது.
பெரமுனவின் பொதுவேட்பாளராக ரணில்
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவை பெரமுனவின் பொதுவேட்பாளராக முன்னிறுத்த முடியும் எனவும், அதுவே பெரமுனவின் உத்தியோகபூர்வ கருத்தாக இனிமேல் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |