அம்பாறையில் காட்டுயானை தாக்கி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு
Ampara
Elephant
By Jaso
அம்பாறை வனவிலங்கு வலயத்தில் இரண்டு இடங்களில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திகவாப்பிய 1 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கோவில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவரை காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்தார்.
பெண் உயிரிழப்பு
ரத்நாயக்க முதியன்சலாகே விக்கிரமசிங்க என்பவரே இந்த தாக்குதலின் காரணமாக உயிரிழந்தவராவார்.

அதேபோன்று சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடு கிராம உத்தியோகத்தர் பிரதேசமான சம்மாந்துறை திகவாப்பிய வீதியில் 43 வயதுடைய பெண் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி