வெள்ளவத்தையில் ரயில்கள் மோதி இருவர் பரிதாப மரணம்
கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற இரண்டு புகையிரத விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்றுமுன்தினம் (நவம்பர் 26) பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த காலி குமரி விரைவு ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
43 வயதான இவர் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவர். இதேவேளை, கொழும்பில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த புகையிரதம் வெள்ளவத்தை ராம கிருஷ்ணா வீதிக்கு அருகில் நேற்று முன்தினம் (நவ.26) இரவு மோதியதில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வெள்ளவத்தையைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.