இலங்கையை வந்தடைந்த இரண்டு எல்.பி எரிவாயு கப்பல்கள்
திரவ பெட்ரோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் இன்று காலை (18) உஸ்வெட்டகேயாவாவில் உள்ள தல்டியாவத்த வாயு இறக்குதுறையில் நங்கூரமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள திரவ பெட்ரோலிய எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், இன்று காலை ஒரு எரிபொருள் தாங்கி கப்பலும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, இலங்கையால் கோரப்பட்ட எரிபொருள் சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றும் நேற்று (17) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததுள்ளது.
'சீஃபிரான்டியர்' எனப் பெயரிடப்பட்ட கப்பல், நேற்று காலை கொழும்புத் துறைமுகத்தில் உள்ள இறங்குதுறைக்கு வந்தடைந்ததாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல் நாட்டிற்கு 17,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெட்ரோலையும், 18,000 மெட்ரிக் தொன் டீசலையும், 2,800 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலையும் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
முத்துராஜவெல மற்றும் கொலன்னாவ எரிபொருள் சேமிப்பு முனையங்களில், கப்பலில் உள்ள எரிபொருள் இருப்புகளை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |