எரிபொருள் பெற வரிசையில் நிற்பவர்களுக்கு நேரும் துயரம் - மற்றுமொருவரின் உயிரும் பறிபோனது
police
death
fuel queue
By Sumithiran
தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ பிரதேசங்களில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற 47 மற்றும் 51 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக தங்கொட்டுவ நகரில் வரிசையில் காத்திருந்த கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் சுருண்டு விழுந்த நிலையில் தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநர் எனவும் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வென்னப்புவவில் எரிபொருள் கொள்வனவுக்காக வரிசையில் நின்ற 51 வயதுடைய மற்றொருவரும் உயிரிழந்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி