மில்லியன் கணக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் - அரசின் அதிரடி தீர்மானம்
2009ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் காவல்துறை திணைக்களம் (Sri Lanka Police) ஊடாக காவல்துறைமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமே இதற்கு முழுப் பொறுப்பாவதால், இது தொடர்பாக விரைவில் அந்தத் திணைக்களம் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம்
இலங்கையில் தற்போது ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதுடன், அதில் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ளனர்.

இவற்றில், இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் வைத்துள்ளதால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யவும் புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        