சுவிட்சர்லாந்தில் அதிகாலைவேளை இடம்பெற்ற பயங்கரம் : இருவர் துடிதுடித்துபலி
Shooting
Switzerland
By Sumithiran
சுவிட்சர்லாந்தின் அல்பைன் நகரமான சியோனில் இன்று திங்கட்கிழமை அதிகாலைவேளை இனந்தெரியாத ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
நகரின் இரண்டு பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தென்மேற்கு வலாய்ஸ் கன்டோனில் உள்ள காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆண்,பெண் என இருவர் உயிரிழப்பு
உயிரிழந்தவர்கள் 34 வயதுடைய பெண்ணும் 41 வயதுடைய ஆண் ஒருவருமே என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கைது
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், காவல்துறையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து, சோதனைச் சாவடியை அமைத்து, கான்டனுக்கு வெளியே பிரதான சாலையில் கார்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி