ரஷ்ய கூலிப்படைக்கு கடத்தப்படும் சிறிலங்கா படையினர் :முன்னாள் படை அதிகாரிகள் கைது
ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலி இராணுவப் படை முகாம்களுக்கு முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரர்களை கடத்திய குற்றச்சாட்டில் சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவருமே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டவர்களாவர்.
குருநாகல் பிரதேசத்தில் கைது
குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ(Nihal Taltuwa) குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு கூலிப்படைகளால் ஈர்க்கப்படுவது நாட்டின் படையினருக்கு இழுக்கு...சவேந்திர சில்வா சுட்டிக்காட்டு!
பாதுகாப்பு அமைச்சு விடுத்திருந்த அறிவிப்பு
ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ வீரர்களை சட்டவிரோதமான முறையில் ரஷ்ய அல்லது உக்ரைனியப் படைகளுடன் சேருமாறு வழிநடத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு முன்னதாக புதன்கிழமை அறிவித்தது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் நாயகம் (ஓய்வு) கமல் குணரத்ன(Kamal Gunaratne) தெரிவித்திருந்தார்.
இதேவேளை சிறிலங்கா இராணுவத்திலிருந்து வெளியேறிய முன்னாள் வீரர்களில் பலர் உக்ரைன் மற்றும் ரஷ்ய கூலிப்படையில் இணைந்து போரிட்டு வருவதாகவும் அவர்களில் பலர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |