மாலைதீவில் இடம்பெற்ற மோதல் : இரண்டு இலங்கையர் கைது
வேலனா சர்வதேச விமான நிலையத்தில்(Velana International Airport.) ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் மாலைதீவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்
கைது செய்யப்பட்ட இருவரும் மெதத்தலாவையைச் சேர்ந்த 43 வயதான கங்கணமலகே திலக் சோமச்சந்திர மற்றும் 46 வயதான தேவநிதிகே பிரியந்த சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி மாலைதீவில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஆலோசனை பெற்ற பின்னர், இரண்டு இலங்கையர்களும் மாலைதீவு காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |