வடக்கு கடலில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது!
41 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் வடக்கு கடலில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடல் பகுதியில் நேற்று (30.10.2025) இரவு இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 185 கிலோகிராம் 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு திட்டத்துக்கு அமைய சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போதைப்பொருட்கள் மீட்பு
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களிடமிருந்து கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 41 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
[MVHFT4S ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        