குறைந்த கட்டணத்தில் வீடுகள் கட்டித்தருவதாக பணமோசடி : இரண்டு பெண்கள் கைது
குறைந்த கட்டணத்தில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து ஒரு தனியார் நிறுவனம் மக்களை ஏமாற்றிய வழக்கில் தொடர்புடைய இரண்டு பெண்களை மிரிஹானா சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
பணம் பெற்ற பின்னரும் வீடுகள் கட்டத் தவறியது தொடர்பாகப் பிரிவிற்கு வந்த 245 புகார்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, அந்தத் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு பெண்கள் கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் மேலாளர் மற்றும் செயல்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களுக்குச் சொந்தமான நான்கு கார்களும் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 மற்றும் 31 வயதுடைய அந்த இரண்டு பெண்களும் கஹவத்த மற்றும் கடுவெலவைச் சேர்ந்தவர்கள். இன்று (19) நுவகொட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர்கள், 29ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |