திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது
திருகோணமலை,பாலையூற்று பகுதியில் வைத்து கடந்த 2008ஆம் இரண்டு பெண்களை வெள்ளை வானில் கடத்தி சென்று, திருகோணமலை கடற்படை முகாமின் கன்சைட் என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய சிறை அறையில் அடைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்த சம்பவம் தொடர்பில், கொழும்பில் வைத்து திங்கட்கிழமை (19) சிஐடி யினரால் கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரிகள் 3 பேரையும் எதிர்வரும் 28 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுடீன், இன்று செவ்வாய்க்கிழமை 20) உத்தரவிட்டார்.
இதன்படி இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 9 கடற்படையினர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசிய சிறையில் சித்திரவதை செய்து படுகொலை
கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதத்தில், மேரி டெல்ஷியா மற்றும் சசிகுமார் தேன்மொழி ஆகிய இரண்டு பெண்களை வெள்ளை வானில் கடத்தி திருகோணமலை கடற்படை முகாமின் கன்சைட் என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய அறையில் சிறையில் அடைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக சி ஐ டி யினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் இந்த மாதம் 5ம் திகதி கே.எச்.கீத்திக்கா சந்தமாலி. .எம்.அருணி தினிசா. ஆகிய இரு பெண் கடற்படையினரை சிஐடியினர் கைது செய்து திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
அதனை தொடர்ந்து கடற்படையினரான ஞானசேகரம் றொபட், பி..எச்.சந்திரசிறி எம்.வீ.கே.சமிந்த குமார. பீ.டபிள்யூ.எஸ்.ஞானக்குமார. ஆகிய 4 பேரை கைது செய்து அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
செம்மணிப் புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு : பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை
நேற்றும் மூவர் கைது
இந்த நிலையில் அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களான மாத்தளை, பூஸ்ஸ மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ,ஓய்வு பெற்ற கடற்படையின் நிர்வாகப் பிரதான கீழ்நிலை அதிகாரிகளான .எம்.எச்.அருண துசார மென்டிஸ். கே.சீ.சுரேக டி சில்வா, ஆர்.எம்.யூ.குமார ரத்நாயக்க. ஆகிய 3 பேரையும் நேற்று திங்கட்கிழமை (19) சிஐடி யினர் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை (20) திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுடீன், முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 20 ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 2 பெண் கடற்படையினர் உட்பட 9 கடற்படையினரை சிஐடியினர் கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிஐடியினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |