புத்தாண்டில் முல்லைத்தீவில் கோரவிபத்து - இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்தில் பலி
accident
police
death
investigation
mullaithivu
By Jaso
புத்தாண்டு தினமான இன்று முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இன்று மாலை டிப்பர் வாகனம் மற்றும் இளைஞர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதிலேயே இந்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிழந்த நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் ஒன்று கூடிய மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் அங்கு அமைதியின்மை தோன்றியுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி