கனடா ஒன்றாரியோவில் பயங்கரம் -இளைஞர்கள் மீது கத்திகுத்து தாக்குதல்
Canada
Death
By Sumithiran
கனடா தலைநகர் ஒன்றாரியோவில் இரண்டு இளைஞர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஒன்றாரியோவின் சட்பரி பகுதியின் கார்சன் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல்
தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி 17 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இவ்வாறு கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கத்தி குத்து தாக்குதலினால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் கிடையாது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி