ஜப்பானைத் தாக்கியது டொல்பின் புயல்
Japan
China
Cyclone
By Jaso
மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பகுதியில் உருவான டொல்பின் புயல், தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தைத் தாக்கியுள்ளது.
வகை 1 புயலாகக் கருதப்படும் டொல்பின், மணிக்கு 198 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலட்சக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்
கோஷிமா மற்றும் ஒகினாவா மாகாணங்களில் வசிக்கும் சுமார் 260,000 மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதன் விளைவாக 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அடுத்த இலக்கு சீனா
அடுத்த சில நாட்களில் இந்தப் புயல் சீனாவின் கிழக்குக் கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக, ஷாங்காய், ஜெஜியாங் மற்றும் புஜியான் ஆகிய பகுதிகளுக்கும் கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்