பொது மக்களின் காணிகளை மீள விடுவிக்குமாறு வடக்கு ஆளுநர் கோரிக்கை
வடக்கு மாகாண ஆளுநரான பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாணத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை மீள விடுவிக்குமாறு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கோரிக்கையை அவர், பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரச மரக் கூட்டுதாபனத்தில் பவித்ரா வன்னியாராச்சியை நேரடியாக சந்தித்த போது முன்வைத்துள்ளார்.
அதாவது வடக்கு மாகாணத்தில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகளானது வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானியை மீளப்பெறல்
இதனால் இந்த காணிகளுக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக சார்ள்ஸ் எடுத்துரைத்துள்ளார்.
இதுமட்டுமன்றி இந்த வர்த்தமானியை மீளப்பெறுவதுடன் மக்களுக்கான பயன்பாட்டு காணிகளை விடுவிக்குமாறும் அவர் பவித்ரா வன்னியாராச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை
மேலும் வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விபரம் அடங்கிய அறிக்கையையும் சார்ள்ஸ், பவித்ரா வன்னியாராச்சியிடம் சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில் சார்ள்ஸினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆளுநரிடம் உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |