உலகம் முழுவதும் இணைய வழயில் தமிழை கற்க புதிய வசதி
உலகம் முழுவதும் இணைய வழி ஊடாக தமிழ் மொழியை கற்கும் வகையில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதன் ஒரு அங்கமாக, உச்சி என்ற இணையத்தளம் நாளை மறுதினம் பொங்கல் தினத்தன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
ஊடக சந்திப்பு
இது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நாளை மறுதினம் 15 ஆம் திகதி மாலை 3 மணிக்கு லண்டன் ஐ.பி.சி. தமிழின் தலைமைப்பணியகத்தில் இடம்பெறவுள்ளது.
ஐபிசி குழுமத் தலைவர் கந்தையா பாஸ்கரன் தலைமையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஐபிசி குழுமத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நிராஜ்டேவிட் மற்றும் உச்சி இணையத்தளத்தின் பணிப்பாளர் மதுரன் தமிழ்வேள் ஆகியோரும் பங்கெடுத்து ஊடக சந்திப்பையும் உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளனர்.
இந்தநிகழ்வில் இணையவழி சூம் தொழினுட்பத்தின் ஊடாக பங்கெடுக்க 00 44 7428631805 என்ற இலக்கத்துக்கு அழைக்கவும்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
