கொழும்புக்கான உதயதேவி தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தடைப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிரிருந்து, திருகோணமலை, கொழும்பு, தொடருந்து சேவைகளை மீண்டும் இன்று(24.12.2025) தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் துரித முயற்சியினால் றீ பில்ட் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக சேதமடைந்த தொடருந்து பாதைகள் திருத்தப் பணிகள் யாவும் நிறைவடைந்ததன் பின்பு கடந்த சில நாட்களாக பரிட்சாத்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததை அடுத்து புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கான உதயதேவி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல் ஓயா சந்தி
இன்று காலை திருகோணமலையிலிருந்து கொழும்பிற்கான சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து செல்லும் பயணிகள் கல் ஓயா சந்தியில் இறங்கி திருமகோணமலையில் இருந்து வரும் கொழும்புக்காண தொடருந்தில் மாற வேண்டும் இதேவேளை மாகோவில் இருந்து மட்டக்களப்புக்கான சரக்கு மற்றும் எரிபொருள் சேவைகளும் புதன்கிழமை தொடக்கம் மீண்டும் முன்னெடுக்கப்பட உள்ளதாக தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |