ஜெய்சங்கருடனான சந்திப்பில் தமிழ் தலைமைகளின் இரட்டை நிலைப்பாடு ...!

Sri Lankan Tamils Tamils Political Development Current Political Scenario
By Shalini Balachandran Dec 24, 2025 04:25 AM GMT
Report

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பு நேற்று (23) கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

மேற்படி சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

மேலும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து மீண்டும் தமக்கிடையில் ஒற்றுமையில்லை என்பதை அரசியல்தலைமைகள் மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

அதாவது, மாகாணசபை தேர்தல் குறித்தும் மற்றும் 13 ஆம் திருத்த சட்டத்தில் இல்லாமல் சென்ற அதிகாரங்கள் முழுமைப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வேறுப்பட்ட நிலைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “ஜெய்சங்கரிடம் ஒற்றையாட்சி குறித்து நான் மட்டுமே வலியுருத்தி இருந்தேன்.

இருப்பினும் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்களும் மாகாண சபை தேர்தல் குறித்தும் மாகாண சபை முறைமையில் 13 ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் திரும்ப திரும்ப கேட்டனரே தவிர ஒற்றை ஆட்சி நிராகரிப்பு குறித்தும் மற்றும் சமஷ்டி ஆட்சி முறைமை குறித்தும் வலியுருத்தவில்லை.

எழுத்து மூலமாக இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் ஆவணம் ஒன்றை தமிழரசுக் கட்சியினர் வழங்கியிருந்தனர்.

அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்து தெரியவில்லை இருப்பினும்  சந்திப்பில் பேசப்பட்ட விதம் தமிழ் தேசியத்தில் சமஷ்டி குறித்து நிற்கும் எங்களை தனிமைப்படுத்துவதாகவே காணப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, இவர்கள் மாறி மாறி கருத்துக்களை ஒருமித்த நிலைப்பாடு இல்லாமல் தெரிவித்திருப்பது இந்தியாவிடம் தமிழ் மக்கள் விவகாரத்தில் அரசியல் தலைமைகளுக்கு தெளிவின்மையை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இது தொடர்பில் விவரிவாக ஆராய்கின்றது கீழுள்ள காணொளி,  


பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ள ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி விவகாரம்!

பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ள ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி விவகாரம்!

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்கும் ஜப்பான்

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்கும் ஜப்பான்

ட்ரம்பால் குறிவைக்கப்படும் வெனிசுலாவின் மூன்றாவது கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்

ட்ரம்பால் குறிவைக்கப்படும் வெனிசுலாவின் மூன்றாவது கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019