பதவி விலகுவாரா உதய கம்மன்பில? அடுத்த வாரம் முடிவு
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ஜூலை 19 மற்றும் 20 திகதிகளில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன்பின் ( 20 ஆம் திகதி மாலை) வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படும் முதலாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.