உதயநிதி ஸ்டாலினை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : திருமாவளவன் தெரிவிப்பு

Udhayanidhi Stalin Vijay Thol. Thirumavalavan Tamil nadu
By Sathangani Aug 04, 2026 10:27 AM GMT
Report

தமிழக சட்டமன்றம் நாளை (05) கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் விஜய்யை தரக்குறைவாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக, திருமாவளவன் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்ட பதிவில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 'இரட்டுற மொழிதல்' என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய அளவிலான பிரச்சினை

எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது, ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர்.

அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு - கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும்.

ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.

உதயநிதி கைதால் வெடித்த போராட்டம் - ஓ.பன்னீர்செல்வம் குண்டுக்கட்டாக கைது

உதயநிதி கைதால் வெடித்த போராட்டம் - ஓ.பன்னீர்செல்வம் குண்டுக்கட்டாக கைது

நாளை கூடவுள்ள சட்டமன்றம்

சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட - தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும்.

உதயநிதி ஸ்டாலினை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : திருமாவளவன் தெரிவிப்பு | Udhayanidhi Stalin Arrested Thirumavalavan X Post

நாளை (05) சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்.

தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

யோஷித - கரன்னாகொடவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

யோஷித - கரன்னாகொடவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்