பொறிஸ் ஜோன்சன் அரசு தப்பியது - சற்றுமுன் வெளிவந்த முடிவு
புதிய இணைப்பு
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வெற்றி பெற்றார்.
பொறிஸ் ஜோன்சன் அரசுக்கு எதிராக இன்று (ஜூன்.07) நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ள 359 உறுப்பினர்களில் பொறிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக 211 உறுப்பினர்களும், எதிராக 148 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்த நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் பொறிஸ் ஜோன்சன் வெற்றி பெற்றதாக கன்சர்வேர்டிவ் கட்சியின் மூத்த தலைவர் கிராஹம் பிரடே அறிவித்தார்.
இதையடுத்து பொறிஸ் ஜோன்சன் அரசு தப்பியது.
பொறிஸ் ஜோன்சன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
பிரித்தானியாவில் மஹாராணி எலிசபெத் முடிசூடிய 70 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று பரபரப்பான பின்னணியில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு மாலை ஆறு மணிமுதல் இரவு எட்டுமணிவரை அவரது கென்சவேட்டிவ் கட்சிக்குள் இடம்பெற்றுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்தால் தனது பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனினும் அமைச்சர்கள் உட்பட 75 இற்கு மேற்பட்ட கென்சவேட்டிவ் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் பிரித்தானிய அரசியலில் பரபரப்பு தொடர்ந்திருந்தது.
கொரோனா முடக்க காலத்தில் சட்டத்துக்கு புறம்பாக பிரதமர் பணியகத்தில் நடத்திய விருந்துகள் பொறிஸ் ஜோன்சனை மிகப்பெரிய அரசியல் நெருக்கடியில் சிக்கவைத்திருந்த நிலையில் இந்த விதிமீறல்களை விசாரித்த சூ கிறே தரப்பும் அபராதங்களை விதித்திருந்தது.
ஜோன்சனின் மறுப்பு
இதனையடுத்த கென்சவேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களில் ஒரு பகுதி அவரை பதவிவிலகுமாறு கோரினாலும் அதனை ஏற்றுகொள்ள பொறிஸ் ஜோன்சன் மறுத்திருந்தார்.
இந்த நிலையில் உட்கட்சி ரீதியில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டிருந்தது.
கென்சவேட்டிவ் கட்சிவிதிகளின் படி ஆகக்குறைந்தது அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள 15 வீதமானோர் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பை நடத்த கோரினால் அவ்வாறான ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டியது நியதியாகும்.
நம்பிக்கையில்லா தீர்மான வாக்களிப்பு
இப்போது பொறிஸ் ஜோன்சன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு கட்சியில் 54 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பங்கள் கிட்டியுள்ளதால் இன்று மாலை (18:00 முதல் இரவு 20:00 வரை) இந்த வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது. இதன் முடிவுகள் இன்றிரவே வெளியிடப்படவுள்ளன.
முன்னதாக தன்னை ஆதரிக்குமாறு சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ள ஜோன்சன் இன்று மாலை ஆதரவுகோரி உரையாற்றியிருந்தார்.
இன்றைய வாக்கெடுப்பில் பொறிஸ் ஜோன்சன் தனது பிரதமர் பதவியை தக்கவைக்க வேண்டுமானால் ஆகக்குறைத்தது 180 ஆதரவு வாக்குகளைப் பெற வேண்டும். அனைத்து அமைச்சர்களுடன் சேர்த்து இதுவரை 75இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் ஜோன்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜோன்சனின் பதவி பறிப்பு
இதனால் ஜோன்சன் பதவி பறிப்பில் இருந்து தப்பலாம் என எதிர்பார்க்கபட்டாலும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களிடம் அவர் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நம்பிக்கையில்லா பிரேணை தோல்வியடைந்தால் இனிவரும் வருட காலத்துக்கு பிரதமர் மீது புதிய நம்பிக்கையில்லா பிரேரணை எதுவும் கொண்டுவரப்படமாட்டாதென கென்சவேட்டிக் கட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.