செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்காக கோடிகணக்கில் செலவிடும் பிரித்தானியா
பிரித்தானியா முழுவதும் ஒன்பது AI ஆராய்ச்சி மையங்களை நிறுவும் நோக்கத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்காக பிரித்தானிய அரசு 100 மில்லியன் பவுண்டுகளை (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.4000 கோடி) செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,கல்வி, சட்ட அமலாக்கம் மற்றும் படைப்புத் தொழில்களில் AI இன் பொறுப்பான பயன்பாட்டை ஆய்வு செய்யும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதை இந்த திட்டம் நோக்காகக் கொண்டு கொண்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் அபாயங்கள் மற்றும் நன்மைகளை நிர்வகிப்பதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு ஆய்வு
செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்காக பொது சேவைகள் மற்றும் பொருளாதாரத்தை சிறப்பாக மாற்றும் மற்றும் புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் என பிரித்தானியாவின் அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மைக்கேல் டோனெல்லன்(Michelle Donnellan) தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் நன்மைகளை பாதுகாப்பாகப் பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக பிரித்தானியா மாற வழி வகுப்பதே இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நவம்பரில்,செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பிற்கான உலகின் முதல் நிறுவனத்தை பிரித்தானியா துவக்கியது மற்றும் செயற்கை நுண்ணறிவின் உலகளாவிய உச்சிமாநாட்டை நடத்தியது.
தொழில்நுட்பத்தின் அபாயங்கள்
இந்த உச்சிமாநாட்டில், தொழில்நுட்பத்தின் அபாயங்களை ஒப்புக்கொள்ள 25க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பிரித்தானியாவை உலகின் செயற்கை நுண்ணறிவின் மையமாக மாற்றும் இலக்குடன் பிரித்தானிய அரசு முன்வந்துள்ளது.
மைக்ரோசாப்ட்(Microsoft),கூகுள்(Google) மற்றும்அமேசான் (Amazon) போன்ற நிறுவனங்கள் பிரித்தானிய அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |