தமிழர்களை விட சீனாவிற்கு முன்னுரிமை கொடுக்கும் மேற்கத்தேய நாடுகள்! கஜேந்திரகுமார் ஆதங்கம்

Ranil Wickremesinghe
By Laksi Feb 08, 2024 07:21 AM GMT
Report

தமிழர்களின் தேசத்தினை மிக வேகமாக இல்லாதொழிக்கின்ற செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான வில்லி நிக்கில், டிபோத் ரொஸ், ஜம்மி ரஸ்கின், டெனி கே.டேவிஸ் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளார். 

இச்சந்திப்பிலேயே மேற்குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

வரி அடையாள எண் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வரி அடையாள எண் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் தீர்மானம் 427 காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்டது.

அந்த வகையில், தமிழர்கள் மீது கரிசனைகளைக் கொண்டுள்ள அவர்களுடனான சந்திப்பில் தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைத்தோம்.  

தமிழர்களை விட சீனாவிற்கு முன்னுரிமை கொடுக்கும் மேற்கத்தேய நாடுகள்! கஜேந்திரகுமார் ஆதங்கம் | The Problem Of Tamil In Connection Kajenthirakumar

விசேடமாக ராஜபக்ஷக்களின் காலத்தில் தமிழ் மக்கள் மீதும், தமிழர் தேசத்தின் மீதும் கடுமையான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது, அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது. 

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 19 இந்திய கடற்றொழிலாளர்கள்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 19 இந்திய கடற்றொழிலாளர்கள்

தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள்

இந்தத் தருணத்தில் தமிழர்களின் தேசத்தினை மிக வேகமாக இல்லாதொழிக்கின்ற செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழர்களை விட சீனாவிற்கு முன்னுரிமை கொடுக்கும் மேற்கத்தேய நாடுகள்! கஜேந்திரகுமார் ஆதங்கம் | The Problem Of Tamil In Connection Kajenthirakumar

பௌத்த மயமாக்கல், அபிவிருத்தியின் பெயரில் தமிழர்களின் நிலங்களைப் பறித்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுதல், தமிழர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து தமிழர்களை பாரிய அபிவிருத்தியின் பெயரால் வெளியேற்றுதல், அடிப்படை உரிமைகளான பேச்சு சுதந்திரம், நினைவுகூருகின்ற சுதந்திரம், கருத்து வெளியிடுகின்ற சுதந்திரம் ஆகிய ஜனநாயக விரோதமான செயற்பாடுகளைத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுத்தல், உள்ளிட்ட செயற்பாடுகளே தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதனால் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன.

கிளிநொச்சியில் எரிந்து நாசமான தும்புத் தொழிற்சாலை

கிளிநொச்சியில் எரிந்து நாசமான தும்புத் தொழிற்சாலை

சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை

அதேநேரம், உள்நாட்டில் பூகோள போட்டித்தன்மை காணப்படுகின்றது. விசேடமாகச் சீனாவுடன் மேற்குலக நாடுகள் போட்டிப்போடுகின்ற தன்மைகள் காணப்படுகின்றன.

தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் சீனாவுடனான விடயங்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளையே மேற்கத்தேய நாடுகள் முன்னெடுத்து வருகின்றன.

தமிழர்களை விட சீனாவிற்கு முன்னுரிமை கொடுக்கும் மேற்கத்தேய நாடுகள்! கஜேந்திரகுமார் ஆதங்கம் | The Problem Of Tamil In Connection Kajenthirakumar

தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள. இதனால் அதற்கு பாரிய நிதி உதவிகள் தேவையாக உள்ளன.

இந்தச் சந்தர்ப்பத்தினை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகள், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குச் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வொன்றை வழங்குவதற்கும், பொறுப்புக்கூறலைச் செய்வதற்காகச் சர்வதேச குற்றவியல் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கும் தங்களுடைய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.

அத்தோடு, தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதோடு, பொறுப்புக்கூறலுக்காவும், இனப்பிரச்சினை தீர்வுக்காகவும் தீர்மானங்களைத் தொடர்ச்சியாக அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார். 

தமிழர்களை விட சீனாவிற்கு முன்னுரிமை கொடுக்கும் மேற்கத்தேய நாடுகள்! கஜேந்திரகுமார் ஆதங்கம் | The Problem Of Tamil In Connection Kajenthirakumar

தமிழர்களை விட சீனாவிற்கு முன்னுரிமை கொடுக்கும் மேற்கத்தேய நாடுகள்! கஜேந்திரகுமார் ஆதங்கம் | The Problem Of Tamil In Connection Kajenthirakumar

ரணிலின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர்

ரணிலின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்!
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024