பதவி விலகினார் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர்! ஸ்டார்மர் அரசுக்கு பெரும் நெருக்கடி

United Kingdom World Keir Starmer
By Dhilak Jun 12, 2026 12:08 AM GMT
Report

பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான பல மாத கால சர்ச்சையைத் தொடர்ந்து, பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி தனது பதவியை விட்டு அதிரடியாக விலகியுள்ளார்.

அதிகரித்து வரும் சர்வதேச அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கேற்ற போதிய நிதியை ஒதுக்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தவறிவிட்டார் என்று அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னர் பிரதமருக்கு விசுவாசமாக இருந்த ஜான் ஹீலியின் இந்த விலகலைத் தொடர்ந்து, இளநிலை பாதுகாப்பு அமைச்சர் அல் கார்ன்ஸும் தனது பதவியைத் துறந்துள்ளார்.

 

இன்றோடு முடிவுக்கு வருகிறது ஈரானுடனான போர்! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

இன்றோடு முடிவுக்கு வருகிறது ஈரானுடனான போர்! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம்

பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பது தொடர்பாகப் பிரதமருடனும் நிதி அமைச்சருடனும் நீண்டநாட்களாக இழுபறி நீடித்ததால், பிரிட்டனின் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் பெருமளவில் தாமதமாகியிருந்தது.

பதவி விலகினார் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர்! ஸ்டார்மர் அரசுக்கு பெரும் நெருக்கடி | Uk Defence Minister Quits

இந்தச் சூழலில், நாட்டின் பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்றப் பிரதமராலும் நிதி அமைச்சகத்தாலும் இயலவில்லை என்று ஹீலி தெரிவித்துள்ளார்.

இந்த அதிரடி பதவி விலகல்களை தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சராக டான் ஜார்விஸ் என்பவரைப் பிரதமர் ஸ்டார்மர் உடனடியாக நியமித்துள்ளார்.

ஸ்டார்மரின் அரசுக்கு நெருக்கடி

எனினும், கடந்த மாதம் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் பதவி விலகியிருந்த நிலையில், தற்போது பாதுகாப்புத் துறையிலும் ஏற்பட்டுள்ள இந்த அடுத்தடுத்த விலகல்கள் பிரதமர் ஸ்டார்மரின் தலைமைத்துவத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

பதவி விலகினார் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர்! ஸ்டார்மர் அரசுக்கு பெரும் நெருக்கடி | Uk Defence Minister Quits

பொருளாதாரத் தேக்கம் மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமைக்கு மத்தியில், பாதுகாப்புச் செலவினங்களை நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் மூன்று வீதமாக உயர்த்துவதாகப் பிரதமர் உறுதியளித்திருந்த போதிலும், நடைமுறையில் அதற்கான நிதியை வழங்க அரசாங்கம் தவறிவிட்டதாக ராணுவ உயரதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறையினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

நேட்டோ உச்சிமாநாட்டிற்குச் சில வாரங்களே உள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சரின் இந்த விலகலானது பிரிட்டன் அரசியலிலும் சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெதன்யாகுவுக்கு அதிர்ச்சியளித்த ட்ரம்பின் அறிவிப்பு! உடன் மேற்கொள்ளப்பட்ட அழைப்பு

நெதன்யாகுவுக்கு அதிர்ச்சியளித்த ட்ரம்பின் அறிவிப்பு! உடன் மேற்கொள்ளப்பட்ட அழைப்பு

ட்ரம்பின் கூற்றை மறுத்தது ஈரான் புரட்சிகர காவல்படை!

ட்ரம்பின் கூற்றை மறுத்தது ஈரான் புரட்சிகர காவல்படை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி