ட்ரம்பின் கூற்றை மறுத்தது ஈரான் புரட்சிகர காவல்படை!
அமெரிக்காவுடன் இறுதி அம்சங்கள் அங்கீகரிக்கப்பட்டு ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) மறுத்துள்ளதுடன், அது குறித்துத் தனது சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
அத்தகைய எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஈரானிய அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்று அது தெளிவுபடுத்தியுள்ளது. ட்ரம்பின் இந்த அதிரடி கூற்றுகளுக்கு ஈரானிய அரசு அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை.
எனினும், போர் தொடங்கியது முதலே ட்ரம்ப் தொடர்ந்து முரண்பாடான மற்றும் துல்லியமற்ற தவறான அறிக்கைகளையே வெளியிட்டு வருகிறார் என கூறப்படுகிறது.
ட்ரம்பின் ஆதாரமற்ற கூற்று
இதேவேளை, ஈரானின் பாதுகாப்புப் படையுடன் நெருங்கிய தொடர்புடைய அந்நாட்டின் செய்தி நிறுவனம், ட்ரம்பின் இந்தச் சமீபத்திய அறிவிப்பு குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஈரான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒரு ஒப்பந்தத்தை அறிவிக்கும் வரை, தெஹ்ரானுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் கூறுவதை அப்படியே உண்மை என்று நம்பிவிடக் கூடாது என்று செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஈரான் தரப்பில் இருந்து முறையான அறிவிப்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் ட்ரம்பின் அறிக்கைகளை அவரது முந்தைய ஆதாரமற்ற கூற்றுகளைப் போலவே பார்க்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |